Monday, February 6, 2012

தைப்பூச திருநாளும் நமது சிந்தனைகளும்

ரொம்ப நாள் கழித்து பதிவு எழுதுகிறேன். ரெகுலராக எழுதுபவரக்ளை பார்க்கும் போது ஆச்சிரியமாகவும் கொஞ்சம் பொறாமையாக இருக்கும். இருக்கும் வேலை நடுவில் எப்படி தினசரி பதிவு எழுத முடிகிறது இவர்களால்??

சரி நண்பர்களே…… இன்றைய தலைப்பைப் பற்றி சிந்திப்போம்.

இந்து மதத்தில் பல திருநாள்கள்,பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் காரணங்கள் உண்டு.

தைப்பூச நாளைப் பற்றியும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நாளை பற்றி யோசித்தது உண்டா???

Monday, August 1, 2011

மன உளைச்சலை டரியல் செய்யலாம் வாங்க

ஹாய் பிரண்ட்ஸ் எப்படி இருக்கீங்க…… இந்த முறையும் நமக்கு உபயோகமுள்ள விஷயத்தை பத்திதான் தெரிஞ்சிக்க போறோம்.


ஆமாங்க.....மாறி வரும் வாழ்க்கை சூழ்நிலையில் நமது ஆரோக்கியத்தை கவனிக்க நேரம் கிடைப்பது கடினம் ஆகிவருகிறது.ஓட்டமும், வேகமும் நிறைந்த இந்த உலகில் நாம் எல்லோரும் அவசர கதியில் இயங்க வேண்டி உள்ளோம்.இதனால் நீங்கள் உங்கள் வீட்டிலோ, வேலை செய்யும் போதோ மன உளைச்சலுக்கு ஆளாவதை உணர்ந்து இருப்பீர்கள். 


நீங்க எப்படியோ தெரியாது நான் உளைச்சலுக்கு ஆளாகியிருக்கேன்.(கீழ இருக்குற பூன மாதிரி) சரிங்க ...... இதற்கு என்னதான் தீர்வூங்கிறத பத்திதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

Friday, July 1, 2011

உடல் எடையை குறைக்க வேண்டுமா....சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா??......படியுங்கள் sorry குடியுங்கள்.

என்ன நண்பர்களே....தலைப்பில் ஏதோ ''குடியுங்கள்'' 
என்று இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா!!...

ஆம் இந்த பதிவு குடிப்பதைப் பற்றிதான். பச்சை தேயிலையின் (Green tea) மகிமைகளைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.காபி அல்லது தேநீரை சரியான நேரத்தில் குடிக்காவிட்டால் நம்மில் சில பேருக்கு வேலையே ஓடாது. தேநீரைப் பற்றிய சீன பழமொழியைப் பாருங்கள்.

 ‘’மூன்று நாட்கள் உணவு கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை, ரே ஒரு நாள் கூட தேனீர் பருகாமல் இருக்க இயலாது.’’ - (சீன பழமொழி)


சீனாவில் பச்சை தேயிலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் உள்ளது. 4700 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவை ஆண்ட பேரரசர் ஷினாங் தன்னுடைய The Divine Farmer's Herb-Root Classiஎன்ற தன்னுடைய நூலில் பச்சை தேயிலையின் சிறப்புக்களை கூறியுள்ளார். 

Saturday, June 18, 2011

பைட்......பைட்.........பைட்........(எச்சரிக்கை; இது உணவைப் பற்றிய செய்தி அல்ல.........)

பென்டிரைவ் அல்லது வன்தட்டை (External hard disk) வாங்க செல்கிறீர்கள்.அதில் 2GB,4GB, 250GB, 500GB என்றெல்லாம் அளவீடுகள் இருக்கும்.நீங்கள் இந்த அளவீடுகளைப் பற்றியெல்லாம் யோசித்தது உண்டா?

கணிணி பற்றிய பரிச்சயம் இருப்போர் பலருக்கும் மெகாபைட்,ஜிகாபைட் வரைக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.ஆனால் ஏக்சாபைட்,பீட்டாபைட் எல்லாம் என்னவென்று தெரியுமா.


எனக்கு dogbite ஐ தவிர எதுவும் தெரியாது என்கிறீர்களா!!
சரி.....சரி.....இந்த அளவீடுகளைப் பற்றியும் அவற்றை கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றியும் இன்றைய தெரிந்து கொண்டேன்,பகிர்ந்து கொண்டேன்-2 (தெ.கொ,ப.கொ-2) பகுதியில் பார்க்கப் போகிறோம்.

Tuesday, May 31, 2011

ஆளும் சபைகளின் அழகிய அணிவகுப்பு


ம்இம் முறை பதிவு போட நேரம் ஆகிவிட்டது. வேலை பளுதான் காரணம்.சென்ற பதிவு தேர்தல் முடிவுகளுக்கு ஒரு நாள் முன்னால் போட்டேன். மக்கள் தெளிவான மெஜாரிட்டியை தந்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தெளிவான மனநிலையோடு ஆட்சி செய்யட்டும்.

ஆட்சி மாற்றத்தையொட்டி தமிழக சட்டசபையும் மாறியது. இது குறித்து எழுந்த சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபைகள் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசைப்பட்டேன்.
அதன் விளைவே இந்த பதிவு
Older Posts
Home