ஹாய் பிரண்ட்ஸ் எப்படி இருக்கீங்க…… இந்த முறையும் நமக்கு உபயோகமுள்ள விஷயத்தை பத்திதான் தெரிஞ்சிக்க போறோம்.
ஆமாங்க.....மாறி வரும் வாழ்க்கை சூழ்நிலையில் நமது ஆரோக்கியத்தை கவனிக்க நேரம் கிடைப்பது கடினம் ஆகிவருகிறது.ஓட்டமும், வேகமும் நிறைந்த இந்த உலகில் நாம் எல்லோரும் அவசர கதியில் இயங்க வேண்டி உள்ளோம்.இதனால் நீங்கள் உங்கள் வீட்டிலோ, வேலை செய்யும் போதோ மன உளைச்சலுக்கு ஆளாவதை உணர்ந்து இருப்பீர்கள்.
நீங்க எப்படியோ தெரியாது நான் உளைச்சலுக்கு ஆளாகியிருக்கேன்.(கீழ இருக்குற பூன மாதிரி) சரிங்க ...... இதற்கு என்னதான் தீர்வூங்கிறத பத்திதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
முதல்ல ....இந்த மன அழுத்தத்தினால் நம்ம உடம்புக்கு என்னென்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்குன்னு பார்ப்போம்
இந்த மன அழுத்த இருக்கே....... உடம்ப மட்டும் பாதிக்கறதோட நிறுத்தறது இல்லீங்க.......நம்ம மனசு,உணர்வுகள் எல்லாத்தையும் தான் பாதிக்கும். எப்படி உடம்பு,மனசு,உணர்வுகள் எல்லாம் ஒன்னோடு ஒன்னு தொடர்போடு இருக்குன்னு.......கீழ இருக்கிற படத்த பாருங்க உங்களுக்கே புரியும்.
சரி நாம்ம மன உளைச்சுளுக்கு ஆளாகிறோம் எப்படி தெரிஞ்சிக்கிறது.........அதற்கான அறிகுறிகள் என்ன......இதுல ஏதாவது உங்களுக்கு இருக்கா பாருங்க
- அதீத கவலை,
- மந்தமான மனநிலை ,
- எரிச்சல்,
- அதிக கிளர்ச்சி அடைதல்,
- அமைதியின்மை,
- ஆத்திரம்,
- தனிமைப் படுத்தபடுவதை போன்ற நினைவு, தலைவலி,
- பேதி அல்லது மலச்சிக்கல்,
- குமட்டல்,தலைச்சுற்றல்,
- வேலைகளை தள்ளிப்போடுதல் ,
- பொறுப்புகளை புறக்கணித்தல்,
- அதிக அளவில் மது அருந்துதல்,
- புகை பிடித்தல்,
- நகம் கடித்தல்,
- கழுத்து வலி போன்றவை.
மன அழுத்தம் – சில உண்மைகள்
மனஅழுத்தம் என்பது சராசரியாக மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உள்ளது. இவைகளால் பிரச்சனைகளை சமாளித்து வளர உதவும் முடியும் அல்லது கணிசமான பிரச்சினைகளை ஏற்படுத்தவும் முடியும். (double edged weapon போல)
மன அழுத்தத்தின் போது சக்திவாய்ந்த வேதிப்பொருட்கள் (neurochemicals) வெளியாகிறது. இது நம்மை பிரச்சனைகளை எதிர்க்கொள்ள தயார் படுத்துகிறது.
நாம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மன அழுத்தத்தினால் ஏற்படும் மாற்றங்கள் நம் உடலை பாதிக்க தொடங்குகிறது
பல நாள்பட்ட, தடையில்லா, எதிர்பாராத, மற்றும் சமாளிக்க இயலா வண்ணம் வரும் மன அழுத்தங்கள் நம் உடலுக்கும், உள்ளதிர்க்கும் மிகவும் சேதாரமுண்டாக்கும் .
மன அழுத்தத்தை முறையான உடற்பயிற்சி மற்றும் தியானம், திட்டமிட்டு வேலை செய்தல், புதிய உத்திகளை கையாளுதல் போன்றவற்றால் சமாளிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
போதை மாத்திரைகள், சில வலி நிவாரணிகள், மது, புகை பிடித்தல், அதிகமான உணவை உட்கொள்ளுதல் போன்றவை மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக தற்காலிக தீர்வையே தருகின்றன. உண்மை என்னவென்றால் இவை பிரச்சனையை தீர்ப்பதில்லை,மேலும் சிக்கலை பெரிது படுதுகின்றன.
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பல சிகிச்சை முறைகள் இருந்தாலும், சம்பந்தப்பட்ட நபருடைய ஒத்துழைப்பும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் இருந்தால் மட்டுமே சிகிச்சைகள் முழு பலனை தரும்.
மன உளைச்சலை டரியல் செய்ய...... என்னவெல்லாம் செய்யலாம்.
டரியல் செய்ய நிறைய வழிகள் கொடுத்து இருக்கேன்.இதுல எதை தேர்வு செய்யறுதுன்னு குழப்பமா இருக்கா. உங்க சூழ்நிலைக்கேற்ப எது ஒத்து வருமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- நல்லஇசையை கேட்கலாம் (மெலடி சாங்கா இருக்கட்டும்.குத்து பாட்டெல்லாம் வேண்டாம்)
- வீட்டை சுத்தம் செய்யலாம்.(அட ஆமாங்க.... நிஜமாத்தான் செஞ்சு பாருங்க.......)
- வீட்டில் மீன்தொட்டி இருந்தால் அதை சில நிமிடங்களுக்கு பார்க்கலாம்.
- நண்பருடன் சேர்ந்து ஒரு வாக்கிங் செல்லலாம்
- பிடித்த பாடலை பாடலாம் அல்லது கேட்கலாம்.
- பிடித்த விளையாட்டை விளையாடலாம்
- சுவாச பயிற்சிகளை (breathing exercises) மேற்கொள்ளலாம்.
- ஓவியம் வரையலாம்.
- பிடித்த இசையுடன் போட்டுவிட்டு நடனம் ஆடலாம்.
- தியானம் செய்யலாம்.
- கடவுள் நம்பிகை உள்ளோர் பிரார்த்தனையில் ஈடுபடலாம்.
- சுய முன்னேற்ற நூல்கள் மற்றும் கட்டுரைகளை படிக்கலாம்.
- '’இல்லை’’ ‘’முடியாது’’ என்று சொல்ல கற்று கொள்ளுங்கள்.(முடிகிற வேலையை மட்டும் ஒப்பு கொள்ளுங்கள். எல்லா வேலைகளையும் ஒப்புகொண்டு விட்டு முடிக்கமுடியாமல் சிரமப்படாதீர்கள்.)
- வேலைகளை திட்டமிடவும்.Time management ரொம்ப முக்கியம்.
- மன அழுத்தத்தை குறைக்கும் புதிய பழக்கங்களை பழகுங்கள்.
- ஹிப்னோஸிஸ் (முறையான பயிற்சி தேவை)
- சிரிப்பு (நகைச்சுவை மற்றும் கார்டூன் சேனல்களை பார்க்கலாம்)
- வீட்டில் சிறிய தோட்டம் இருந்தால் அதில் சிறிது நேரம் வேலை செய்யலாம்
- ஒரு சமச்சீர் (balanced diet) உணவை உட்கொள்ளுங்கள்
- அரோமாதெரபி
- காஃபின் (caffeine) உட்கொள்வதை குறைக்கவும்
- எந்த வேலையையும் தள்ளிப்போட வேண்டாம்
- பச்சை தேயிலை (green tea) குடிக்கவும் (மேலும் தெரிந்து கொள்வதற்கு இங்கு செல்லவும்)
ஹி…ஹி…… சில காரணங்களினால் மன உளைச்சுலுக்கு ஆளாகியிருக்கும் காரணத்தால் இது எனக்கு நானே போட்டுக்கிற பதிவு ன்னு கூட சொல்லலாம்.
உங்களுக்கும் உபயோகமாக இருக்கும்னு நினைக்கிறேன். பதிவு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.
சரி நண்பர்களே...... மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போமா.
அதுவரை with LOL (Lots of Love)
|
7 comments:
காமெடி டைட்டில் , சீரியஸ் பதிவு
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
nalla pathivu.. mana aluththam earpadumpothu naam mikuntha makilciyudan than irukkirom ennru adikkadi sollikkolvathu nalla munnerram kodukkum enpathu enathu anupava karuththu.
nanri..
@mohan
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@Mr.Rain
நன்றி Mr.Rain
பேனா துளிகளில் ஓர் உயிரோட்டம் தெரிகிறது,வாழ்த்துகள்.
@dhanasekaran .S தங்கள் பாராட்டுக்கு நன்றி தனசேகரன். உற்சாகத்தை தருகிறது.
நேரமின்மையால் தொடர்ந்து எழுத முடியவில்லை.ஆனால் முயற்சியை கை விடவில்லை.நிச்சயம் எழுதுவேன்.
Post a Comment