Saturday, April 23, 2011

புத்தகங்கள் என் நண்பேண்டா


வாசக நண்பர்களே இன்று சர்வதேச புத்தக தினம். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நண்பர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவ்வகையில் எனக்கும் உண்டு.
வாழ்வில் சோர்ந்திருக்கும் சில சந்தர்பங்களில் என்னை எனக்கு அறிமுகபடுத்தியதே அந்த நண்பர்கள் தான். ஆம் நான் புத்தகங்களை தான் சொல்கிறேன். இதோ மார்க் ட்வெயின் என்ற அறிஞர் சொல்வதை கேளுங்கள்
‘’நல்ல நண்பர்கள், நல்ல புத்தங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை” 
நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் அறிவுப் புதையல்கள், நம் நம்பிக்கை மாளிகையின் கதவுகள்.

அவை நம்மை சாதிக்கத் தூண்டும் கிரியா ஊக்கிகள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தகவாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப் படுத்தியுள்ளான் பேரறிஞர் தாமஸ் ஜெஅபர்சன்.(Thomas Jefferson)

Saturday, April 16, 2011

தெரிந்து கொண்டேன், பகிர்ந்து கொண்டேன் -1 (ரஜினியின் சாகசங்களும் …… உடான்ஸ் கற்பனைகளும்……..)


நண்பர்களே, இன்றைய தெரிந்து கொண்டேன், பகிர்ந்து
கொண்டேன் (சுருக்கமாக தெ.கொ, ப.கொ ) பகுதியில் 
ரஜினியைப் பற்றித்தான். அவரைப் பற்றி அவ்வப்போது 
பரபரப்பாக செய்திகள் ஏதாவது வந்து கொண்டுதான் 
இருக்கின்றன. நமக்கும் அதை தெரிந்து கொள்ள வேண்டும் 
என்ற ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.

காமடி கலந்த அவரது ஹுரோயிஸத்தை நம்மில் ரசிக்காதவர் யார்?

Sunday, April 10, 2011

சீறிய சுனாமி.........சீறாத ஜப்பானியர்கள்

                                            எவ்வாறு எதிர்கொண்டார்கள் சுனாமியை

(ஜப்பான் மக்களிடம் இருந்து நாம் (இந்தியர்கள்) கற்றுகொள்ள வேண்டிய பாடங்கள்)

1.அமைதி காத்தமை

சுனாமி வந்ததாக அறிவிக்கபட்டவுடன் யாரும் அதற்காக தோளிலும், மார்பிலும் அடித்து கொண்டு அழுது ஆர்பாட்டம் செய்யவில்லை.அமைதியாக பிரச்சனையை எதிர் கொள்ள தயாரானார்கள்.

2. ஒழுங்கு முறை

பாதிக்கபட்ட மக்களுக்கு தண்ணீர் மற்றும் காய்கறிகளை அரசாங்கம் வழங்கிய போது வரிசையில் நின்றுதான் பொறுமையாக வாங்கி கொண்டார்கள். முட்டல், மோதல், கூச்சல், குழப்பம் எங்கும் கிடையாது.

Tuesday, April 5, 2011

போடுங்கம்மா ஓட்டு - ஓட்டு பதிவு இயந்திரத்தை பாத்து

                ஓட்டுப் போடறது எப்படினு தெரியுமா?



தலைப்பு தான் போடுங்கம்மான்னு இருக்கேயொழிய இந்த பதிவு என்னவோ ஐயா,அம்மா இருபாலருக்கும் தான்.
சரி. மகா ஜனங்களே.தேர்தல் வர போவுது.நீங்களும் ஓட்டு போட ஆர்வமா இருப்பீங்க.
ஆனா இப்பவெல்லாம் மிஷின்ல ஓட்டு போட சொல்றாங்க.அத பத்தி நமக்கு ஒன்னும் தெரியாதேன்னு பதற வேணாம்.
இந்த பதிவில் அத பத்திதான் பார்க்க போறோம்.
அதுக்கும் முதல்ல ஏன் வாக்கு பதிவு இயந்திரத்தை பயன்படுத்துனும்?அதனால என்ன லாபம்? பழைய முறையான ஓட்டு சீட்டையே பயன்படுத்தினால் என்னான்னு நீங்க கேக்கறதது புரியுது? 

Newer Posts Older Posts
Home