Monday, August 1, 2011

மன உளைச்சலை டரியல் செய்யலாம் வாங்க

ஹாய் பிரண்ட்ஸ் எப்படி இருக்கீங்க…… இந்த முறையும் நமக்கு உபயோகமுள்ள விஷயத்தை பத்திதான் தெரிஞ்சிக்க போறோம்.


ஆமாங்க.....மாறி வரும் வாழ்க்கை சூழ்நிலையில் நமது ஆரோக்கியத்தை கவனிக்க நேரம் கிடைப்பது கடினம் ஆகிவருகிறது.ஓட்டமும், வேகமும் நிறைந்த இந்த உலகில் நாம் எல்லோரும் அவசர கதியில் இயங்க வேண்டி உள்ளோம்.இதனால் நீங்கள் உங்கள் வீட்டிலோ, வேலை செய்யும் போதோ மன உளைச்சலுக்கு ஆளாவதை உணர்ந்து இருப்பீர்கள். 


நீங்க எப்படியோ தெரியாது நான் உளைச்சலுக்கு ஆளாகியிருக்கேன்.(கீழ இருக்குற பூன மாதிரி) சரிங்க ...... இதற்கு என்னதான் தீர்வூங்கிறத பத்திதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

Friday, July 1, 2011

உடல் எடையை குறைக்க வேண்டுமா....சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா??......படியுங்கள் sorry குடியுங்கள்.

என்ன நண்பர்களே....தலைப்பில் ஏதோ ''குடியுங்கள்'' 
என்று இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா!!...

ஆம் இந்த பதிவு குடிப்பதைப் பற்றிதான். பச்சை தேயிலையின் (Green tea) மகிமைகளைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.காபி அல்லது தேநீரை சரியான நேரத்தில் குடிக்காவிட்டால் நம்மில் சில பேருக்கு வேலையே ஓடாது. தேநீரைப் பற்றிய சீன பழமொழியைப் பாருங்கள்.

 ‘’மூன்று நாட்கள் உணவு கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை, ரே ஒரு நாள் கூட தேனீர் பருகாமல் இருக்க இயலாது.’’ - (சீன பழமொழி)


சீனாவில் பச்சை தேயிலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் உள்ளது. 4700 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவை ஆண்ட பேரரசர் ஷினாங் தன்னுடைய The Divine Farmer's Herb-Root Classiஎன்ற தன்னுடைய நூலில் பச்சை தேயிலையின் சிறப்புக்களை கூறியுள்ளார். 

Saturday, June 18, 2011

பைட்......பைட்.........பைட்........(எச்சரிக்கை; இது உணவைப் பற்றிய செய்தி அல்ல.........)

பென்டிரைவ் அல்லது வன்தட்டை (External hard disk) வாங்க செல்கிறீர்கள்.அதில் 2GB,4GB, 250GB, 500GB என்றெல்லாம் அளவீடுகள் இருக்கும்.நீங்கள் இந்த அளவீடுகளைப் பற்றியெல்லாம் யோசித்தது உண்டா?

கணிணி பற்றிய பரிச்சயம் இருப்போர் பலருக்கும் மெகாபைட்,ஜிகாபைட் வரைக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.ஆனால் ஏக்சாபைட்,பீட்டாபைட் எல்லாம் என்னவென்று தெரியுமா.


எனக்கு dogbite ஐ தவிர எதுவும் தெரியாது என்கிறீர்களா!!
சரி.....சரி.....இந்த அளவீடுகளைப் பற்றியும் அவற்றை கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றியும் இன்றைய தெரிந்து கொண்டேன்,பகிர்ந்து கொண்டேன்-2 (தெ.கொ,ப.கொ-2) பகுதியில் பார்க்கப் போகிறோம்.

Tuesday, May 31, 2011

ஆளும் சபைகளின் அழகிய அணிவகுப்பு


ம்இம் முறை பதிவு போட நேரம் ஆகிவிட்டது. வேலை பளுதான் காரணம்.சென்ற பதிவு தேர்தல் முடிவுகளுக்கு ஒரு நாள் முன்னால் போட்டேன். மக்கள் தெளிவான மெஜாரிட்டியை தந்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தெளிவான மனநிலையோடு ஆட்சி செய்யட்டும்.

ஆட்சி மாற்றத்தையொட்டி தமிழக சட்டசபையும் மாறியது. இது குறித்து எழுந்த சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபைகள் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசைப்பட்டேன்.
அதன் விளைவே இந்த பதிவு

Thursday, May 12, 2011

ஜெயிக்க போவது யாரு..............

நாளை (13-5-2011) தமிழகத்திற்கு முக்கிய நாள்.   
அடுத்த ஐந்து வருட தலையெழுத்தை தீர்மானிக்கும் நாள்……. 
     
அதிக சதவீதம் வாக்கு பதிவு, முன்பு எப்போதும் இல்லாத அளவு 
தேர்தல் கமிஷனின் கட்டுபாடுகள், செய்த சாதனைகளை நம்பாமல் வைட்டமின் ‘ப’ வை நம்பும் அரசியல் கட்சிகள் என்று ஒரு வழியாக தேர்தல் திருவிழா* முடிந்ததோடு அவரவர் நிலைக்கேற்ப கவலைகளையும் தந்து சென்று உள்ளது. 

Saturday, May 7, 2011

அட்சய திருதி --- கற்க வேண்டிய பாடங்கள்


அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள் ‘’எப்போதும் குறையாதது’’. அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது.

இதற்கு உண்மையான அர்த்தம் என்ன வென்றால் இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தா ருமங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பது தான்.  ஆனா நாட்டுல நடக்குற கூத்து என்ன??

நேத்து நம்ம மக்கள் வாங்கி குவிச்ச தங்கம் எவ்வளவுன்னு பாருங்க !!

Sunday, May 1, 2011

சாய் பாபாவின் சேவைகள்

இம்முறை சாய் பாபா வை பற்றி பதிவு போடலாம் என்று நினைத்து வலைப்பக்கங்களில் உலா வந்த போது ஏற்கனவே அவரை பற்றி பலரும் பதிவிட்டு இருந்ததை படிக்க நேர்ந்தது. எல்வாற்றையும் படித்து விட்டு பதிவு போடுவதற்கு தான் சற்று நேரம் ஆகிவிட்டது.

பதிவு செய்தவர்களிடையே இரண்டு விதமான அபிப்ராயங்களை இருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.ஒரு சாரார் அவரை தெய்வமாக வணங்குபவர்கள்.இன்னொரு பிரிவை சேர்ந்தவர்கள் அவரை வெறும் மேஜிக் நிபுணர்,சித்து விளையாட்டுகாரர்,போலி சாமியார் என்று சொல்லியிருப்போர்.

இந்த பதிவின் நோக்கம் அவர் இறைவனுடைய அவதாராமா இல்லையா என்பதைப் பற்றியோ அவரைச் சார்ந்த சர்ச்சைகளைப் பற்றியோ விவாதிப்பதன்று.மாறாக இதுவரை அவர் செய்த சேவைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதே ஆகும்.

Saturday, April 23, 2011

புத்தகங்கள் என் நண்பேண்டா


வாசக நண்பர்களே இன்று சர்வதேச புத்தக தினம். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நண்பர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவ்வகையில் எனக்கும் உண்டு.
வாழ்வில் சோர்ந்திருக்கும் சில சந்தர்பங்களில் என்னை எனக்கு அறிமுகபடுத்தியதே அந்த நண்பர்கள் தான். ஆம் நான் புத்தகங்களை தான் சொல்கிறேன். இதோ மார்க் ட்வெயின் என்ற அறிஞர் சொல்வதை கேளுங்கள்
‘’நல்ல நண்பர்கள், நல்ல புத்தங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை” 
நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் அறிவுப் புதையல்கள், நம் நம்பிக்கை மாளிகையின் கதவுகள்.

அவை நம்மை சாதிக்கத் தூண்டும் கிரியா ஊக்கிகள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தகவாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப் படுத்தியுள்ளான் பேரறிஞர் தாமஸ் ஜெஅபர்சன்.(Thomas Jefferson)

Saturday, April 16, 2011

தெரிந்து கொண்டேன், பகிர்ந்து கொண்டேன் -1 (ரஜினியின் சாகசங்களும் …… உடான்ஸ் கற்பனைகளும்……..)


நண்பர்களே, இன்றைய தெரிந்து கொண்டேன், பகிர்ந்து
கொண்டேன் (சுருக்கமாக தெ.கொ, ப.கொ ) பகுதியில் 
ரஜினியைப் பற்றித்தான். அவரைப் பற்றி அவ்வப்போது 
பரபரப்பாக செய்திகள் ஏதாவது வந்து கொண்டுதான் 
இருக்கின்றன. நமக்கும் அதை தெரிந்து கொள்ள வேண்டும் 
என்ற ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.

காமடி கலந்த அவரது ஹுரோயிஸத்தை நம்மில் ரசிக்காதவர் யார்?

Sunday, April 10, 2011

சீறிய சுனாமி.........சீறாத ஜப்பானியர்கள்

                                            எவ்வாறு எதிர்கொண்டார்கள் சுனாமியை

(ஜப்பான் மக்களிடம் இருந்து நாம் (இந்தியர்கள்) கற்றுகொள்ள வேண்டிய பாடங்கள்)

1.அமைதி காத்தமை

சுனாமி வந்ததாக அறிவிக்கபட்டவுடன் யாரும் அதற்காக தோளிலும், மார்பிலும் அடித்து கொண்டு அழுது ஆர்பாட்டம் செய்யவில்லை.அமைதியாக பிரச்சனையை எதிர் கொள்ள தயாரானார்கள்.

2. ஒழுங்கு முறை

பாதிக்கபட்ட மக்களுக்கு தண்ணீர் மற்றும் காய்கறிகளை அரசாங்கம் வழங்கிய போது வரிசையில் நின்றுதான் பொறுமையாக வாங்கி கொண்டார்கள். முட்டல், மோதல், கூச்சல், குழப்பம் எங்கும் கிடையாது.

Tuesday, April 5, 2011

போடுங்கம்மா ஓட்டு - ஓட்டு பதிவு இயந்திரத்தை பாத்து

                ஓட்டுப் போடறது எப்படினு தெரியுமா?



தலைப்பு தான் போடுங்கம்மான்னு இருக்கேயொழிய இந்த பதிவு என்னவோ ஐயா,அம்மா இருபாலருக்கும் தான்.
சரி. மகா ஜனங்களே.தேர்தல் வர போவுது.நீங்களும் ஓட்டு போட ஆர்வமா இருப்பீங்க.
ஆனா இப்பவெல்லாம் மிஷின்ல ஓட்டு போட சொல்றாங்க.அத பத்தி நமக்கு ஒன்னும் தெரியாதேன்னு பதற வேணாம்.
இந்த பதிவில் அத பத்திதான் பார்க்க போறோம்.
அதுக்கும் முதல்ல ஏன் வாக்கு பதிவு இயந்திரத்தை பயன்படுத்துனும்?அதனால என்ன லாபம்? பழைய முறையான ஓட்டு சீட்டையே பயன்படுத்தினால் என்னான்னு நீங்க கேக்கறதது புரியுது? 

Wednesday, March 30, 2011

கரு உண்மை உரு கற்பனை


" ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல' ' - கருணாநிதி பேட்டி

செய்தி- 1

‘’ கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர்.  என் மனைவி தயாளுதான் 60 சதவீத பங்குதாரர். 

Saturday, March 26, 2011

தேர்தல் அறிக்கைகளும்………………இலவச அறிவிப்புகளும்

                                             லாஜிக் இல்லாத மேஜிக்


தி.மு.க ,மற்றும் அ.தி.மு.க -- இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகயை படித்திருப்பீர்கள்.(பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை). அறிவிக்கபட்டுள்ள இலவசங்களை பார்த்தால் ---- இது மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக தெரியவில்லை,அரசியல் கட்சிகள் தாங்கள் தேர்தலில் தேறுவதற்காக வெளியிடப் பட்ட அறிக்கையாகவே தெரிகிறது.

Saturday, March 19, 2011

கார் வாங்களையோ கார்......... Tata Nano ஒர் அலசல்


டாட்டா நேனோ 
இந்தியாவின் பாரம்பரியமிக்க டாட்டா மோட்டார்ஸின் தயாரிப்பு.
ஜனவரி 10, 2008 இல் புது டெல்லியில் நடந்த வாகனங்களின் கண் காட்சியின் போது அறிமுகப்படுத்தப் பட்டது.


அறிமுக விழாவில்

People's Car என்றழைக்கப்படும் இக் கார் தற்போது உலகில் உள்ளவற்றில் எல்லாம் மலிவானது.
விலை (வரிகள், போக்குவரத்துச் செலவுகள் தவிர்த்து) ரூபாய் ஒரு இலட்சம் ஆகும்.

Thursday, March 17, 2011

Famous Quotes (சிறந்த பொன்மொழிகள்)

அன்றும் , இன்றும்,என்றும் சிந்திக்க - சிறந்த பொன்மொழிகள்
Mahatma Gandhi

சமுதாயப் பாவங்கள் ஏழு.....(seven social sins) 
1. கொள்கையற்ற அரசியல் (Politics without Principle)
2.
உழைப்பற்ற செல்வம் (Wealth without work)
3.
நெறியற்ற வாணிபம் (Commerce without morality)
4.
பண்பாடற்ற கல்வி (Knowledge without character)
5.
மனசாட்சியற்ற மகிழ்ச்சி (Pleasure without conscience)
6.
மனித நேயமற்ற அறிவியல் (Science without morality)
7.
தியாகமற்ற வழிபாடு (Worship without humanity) 
                                               -(Young India வில் 22-10-1925 அன்று எழுதியது)
Newer Posts
Home