Tuesday, April 5, 2011

போடுங்கம்மா ஓட்டு - ஓட்டு பதிவு இயந்திரத்தை பாத்து

                ஓட்டுப் போடறது எப்படினு தெரியுமா?



தலைப்பு தான் போடுங்கம்மான்னு இருக்கேயொழிய இந்த பதிவு என்னவோ ஐயா,அம்மா இருபாலருக்கும் தான்.
சரி. மகா ஜனங்களே.தேர்தல் வர போவுது.நீங்களும் ஓட்டு போட ஆர்வமா இருப்பீங்க.
ஆனா இப்பவெல்லாம் மிஷின்ல ஓட்டு போட சொல்றாங்க.அத பத்தி நமக்கு ஒன்னும் தெரியாதேன்னு பதற வேணாம்.
இந்த பதிவில் அத பத்திதான் பார்க்க போறோம்.
அதுக்கும் முதல்ல ஏன் வாக்கு பதிவு இயந்திரத்தை பயன்படுத்துனும்?அதனால என்ன லாபம்? பழைய முறையான ஓட்டு சீட்டையே பயன்படுத்தினால் என்னான்னு நீங்க கேக்கறதது புரியுது? 

சொல்றேன். வாக்கு பதிவு இயந்திரம் பயன்படுத்த எளிமையானது ,பாதுகாப்பானது
வாக்கு சாவடியில் வாக்காளர்கள் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைகிறது.

ஓட்டு போட காத்திருப்போர்
கள்ள ஓட்டு போடும் வாய்ப்பு மிகவும் குறையுது.

செல்லாத ஓட்டு போடும் வாய்ப்பு இல்லை






ஒரு ஓட்டு பதிவு இயந்திரத்தின் விலை 5500 ரூபாய்தான். 

வாக்கு சீட்டை பயன்படுத்தினால் அதற்கு பல டன் பேப்பர்ன்னு பல கோடிகள் செலவு செய்ய வேண்டியிருக்கும்.



ஒட்டு பெட்டி 

ஓட்டு பதிவு இயந்திரம் -எடை குறைவு


ஓட்டு பெட்டியை ஓர் இடத்தில் மற்றோர் இடத்துக்கு மாற்றுவது கடினம்.ஓட்டு பதிவு இயந்திரமோ எடைகுறைவானது.ஆகையால் இந்த பிரச்சனை கிடையாது.


ஒட்டு பதிவு இயந்திரத்தில் ஓட்டு போட்ட பிறகு அத எண்றதும் எளிது. துள்ளியமாகவும், வேகமாகவும் செஞ்சி முடுச்சி விடலாம். வாக்கு சீட்டு முறையிலோ பல மணி நேரம் ஆகும்.

ஓட்டு பதிவு இயந்திரத்தில் பதிவு செஞ்ச ஓட்டுக்கள் பத்து ஆண்டுகள் வரை பாதுகாத்து வைக்க முடியும். வெறும் 6 வோல்ட் பேட்டரி மூலம் இந்த இயந்திரத்தை இயக்க முடியும்.

குறைவான வோல்ட் பேட்டரி பயன் படுத்தபடுவதால் ஷாக் அடிக்கும் வாய்ப்பு இல்லை.வாக்காளர்கள் தைரியமாக வாக்களிக்கலாம்.


சரி அடுத்து ஓட்டு பதிவு இயந்திரத்தை பற்றி பார்ப்போம்.


இது தாங்க ஓட்டு பதிவு செய்ற இயந்திரம். இதில் 3 பாகம் இருக்கு.
CONTROL UNIT – இந்த பகுதி வாக்கு சாவடியில் உள்ள அதிகாரியின் கட்டுபாட்டில் இருக்கும்.இதில் நாம் ஒன்னும் செய்ய முடியாது.
INTERCONNECTING CABLE --- இது control unit ஐ ballot unit ஐயும் இணைக்கும் பகுதி
BALLOT UNIT --- இதில் தான் நாம் வோட்டு போட வேண்டும். இதில் 64 பெயர்களைதான் சேர்க்க இயலும்.
(ஒரு தொகுதியில 64 பேர் மேல வேட்பாளர்கள் இருந்தால் இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாது. இது போன்ற இடத்தில் பழைய வாக்கு சீட்டு முறை தான் பயன்படுத்த முடியும்.)


இப்ப ballot unit ஐ பற்றி பார்போம்
இயந்திரத்தை இயக்க பட்டவுடன், “READY” என்ற இடத்தில் உள்ள பல்ப் எரியும்.
“SLIDE SWITCH WINDOW” --- 64 வேட்பாளர் பெயர்தான் இதில் பயன் படுத்த முடியும்ன்னு சொன்னேன் இல்லையா---- இதில் வேட்பாளர் பெயர்கள் பதினாறு ,பதினாறாக வரிசையா இருக்கும்.
1-16 பெயர்களை முதல் வரிசையிலும்
16-32 ,33-48, 49-64 ஆகிய பெயர்கள் முறையே இரண்டாம்,மூன்றாம்,நான்காம் வரிசையிலும் இருக்கும்.
ஒரு வரிசையில் இன்னொரு வரிசைக்கு போக slide switch window ஐ பயன்படுத்தனும்.
“CANDIDATE BUTTON & CANDIDATE LAMP” ----- இதுல அழுத்தி தான் வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வோட்டு போடனும். candidate Button (நீல நிறம்) அழித்தியவுடன் அதற்கான Lamp (சிகப்பு நிறம்) எரியும்.
‘’BALLOT PAPER SCREEN” --- இதில் வேட்பாளர்கள் பெயர் எழுதியிருப்பார்கள்.














சரி இப்ப, நம்ம விஷயத்துக்கு வருவோம்.
ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் ஓட்டு போடறது எப்படினு பார்ப்போம்.

வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை தேர்தல் அலுவலரிடம் காட்டி சரி பாத்துக்கனும். 

வாக்காளர் அடையாளம் சரி பார்க்கபட்ட பின் ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து அங்குள்ள ரெஜிஸ்டரில் உங்க கையெழுத்தை போடுங்க. 
ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்ட பின் ஆள்காட்டி விரலில் அடையாள மை இடப்படும். அது காயும் வரை காத்திருக்க வேண்டும்.

மை காய்ந்த பின் நம்மை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ள அறைக்குச் செல்லுமாறு தேர்தல் அதிகாரி சொல்லுவார்.
வாக்குப் பதிவு இயந்திரத்திற்குச் சென்ற பின் அதிகாரி சொல்லியவுடன் வாக்கைப் பதிவு செய்ய வேண்டும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பெயர்கள், சின்னங்களுக்கு அடுத்து இரண்டு பட்டன்கள் இருக்கும். ஒன்று சிவப்பு நிறத்திலும் (அதாங்க candidate lamp), இன்னொன்று நீலநிறத்திலும் இருக்கும் (இது candidate button).---(சந்தேகம்னா மேல உள்ள படத்தை பாருங்க)

நாம் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு நேரே உள்ள நீல நிற பட்டனை அழுத்த வேணும். அப்படிச் செய்தவுடன் சிவப்பு நிற பட்டன் எரியும். 

அதைத் தொடர்ந்து பீப் சத்தம் ஒன்று எழுந்து, சில விநாடிகள் நீடிக்கும். 
அந்த சத்தம் நின்ன உடன், வாக்கு (சரியாக) பதிவாயிடுச்சின்னு அர்த்தம்.

இவ்ளோதாங்க வாக்குப் பதிவு. 

முன்பு போல பேப்பரை நான்காக மடித்து, அதை வாக்குப்பெட்டிக்குள் போட்டு, குச்சியை வைத்து குத்தி, கஷ்டப்பட வேண்டியதில்லை.

எனவே, வாக்காளர்களேஉங்களது ஜனநாயகக் கடமையை மறக்காதீங்க.

கடைசியா ஓரு வேண்டுகோள்;

இலவசங்களுக்காவோ,பணத்துக்காகவோ மயங்கி ஓட்டு போடாதீங்க.

உங்க அடுத்த ஐந்து வருஷ வாழ்க்கை உங்க கையிலங்கிறத(நீங்க போடுற ஓட்டுல)கிறத ஞாபகம் வச்சுகிட்டு பொறுப்பா நடந்துக்கோங்க.

பார்போம்.
நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்

ஓட்டு போடறது எப்படின்னு பாத்தோம் இல்லையா..... சரி தேர்தல் முடியட்டும் போட்ட வோட்டுகளை எப்படி எண்ணறாங்கன்னு இன்னொரு பதிவுல சொல்றேன்.



0 comments:

Post a Comment

Newer Post Older Post
Home