Saturday, April 23, 2011

புத்தகங்கள் என் நண்பேண்டா


வாசக நண்பர்களே இன்று சர்வதேச புத்தக தினம். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நண்பர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவ்வகையில் எனக்கும் உண்டு.
வாழ்வில் சோர்ந்திருக்கும் சில சந்தர்பங்களில் என்னை எனக்கு அறிமுகபடுத்தியதே அந்த நண்பர்கள் தான். ஆம் நான் புத்தகங்களை தான் சொல்கிறேன். இதோ மார்க் ட்வெயின் என்ற அறிஞர் சொல்வதை கேளுங்கள்
‘’நல்ல நண்பர்கள், நல்ல புத்தங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை” 
நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் அறிவுப் புதையல்கள், நம் நம்பிக்கை மாளிகையின் கதவுகள்.

அவை நம்மை சாதிக்கத் தூண்டும் கிரியா ஊக்கிகள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தகவாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப் படுத்தியுள்ளான் பேரறிஞர் தாமஸ் ஜெஅபர்சன்.(Thomas Jefferson)

ஏன் புத்தக தினம்
பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் நிறுவனத்தின் தீர்மானத்தின்படி*    (தீர்மானத்தின் விபரம் கீழே) ஒவ்வொறு ஆண்டும்   ஏப்ரல் 23 அன்று  புத்தகம் தொடர்பான விழிப்புணர்வை வளர்ப்பதற்காக  ‘’சர்வதேச புத்தக தினம்’’ கடைபிடிக்கப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான ஏப்ரல் 23 அன்று உலகப்புத்தக தினம் கடைப்பிடிக்கப்படுவதை பொருத்தமானதாகக் யுனெஸ்கோ மாநாடு கருதியது.

*தீர்மானத்தின் விபரம்;
("அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்")


உலக வரலாற்றில் பெறும் மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகங்கள்
Ø  மனிதகுல நாகரிகத்தை முன்னெடுத்துச் சென்றிருப்பதில் மகத்தான பாத்திரம் புத்தகங்களுக்கு ண்டு. காட்டுமிராண்டிகளின் கூடாரமாக காட்சி அளித்த சீனாவில் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவை, 2000 ஆண்டுகளுக்கு முன் கன்ஃபியூசியஸ் எழுதிய புத்தகங்கள்.

Ø  13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்கோ போலோ எழுதிய பயணங்கள் என்ற மகத்தான புத்தகம், திரைகடல் ஓடி திரவியம் தேடும் வேட்கையை உலகெங்கும் உருவாக்கியது. அந்தப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, நகைகளும் வாசனைத் திரவியங்களும் மிகுந்த இந்தியாவைத் தேடிப் பயணம் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகமான அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

Ø  சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற பண்டைக்கால கிரேக்க தத்துவாசிரியர்களின் நூல்களையும், சிஸரோ, செனீக்கா போன்ற பண்டைக்கால லத்தீன் எழுத்தாளர்களின் நூல்களையும், தேடித்தேடிப் படிக்கும் தீவிர ஆர்வம் 14 ஆம் நூற்றாண்டின்போது ஐரோப்பாவில் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தின் விளைவாகத்தான் ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கமும், அதன் தொடர்ச்சியாக உருவான தொழில் புரட்சியும் ஏற்பட்டது.

Ø  இந்திய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கிய காந்தியடிகள் தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட புத்தகம் என்று ஜான் ரஸ்கின் எழுதிய அன்ட்டூ திஸ் லாஸ்ட்”(unto this last) புத்தகத்தைக் குறிப்பிடுகிறார். ரஸ்கினின் அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது வாசித்த நான், அதன் தாக்கத்தால் அன்று இரவு முழவதும் தூங்கவில்லை.

 கடைசி மனிதனும் சிறந்த வாய்ப்புக்களைப் பெற வேண்டும் என்ற  உயர்ந்த கோட்பாட்டுக்கு ஏற்ப எனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே நான் உறுதிசெய்துவிட்டேன்என்று அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பின்னாட்களில் விளக்கியுள்ளார் காந்தியடிகள்.

Ø  On the origin of species ---  சார்ல்ஸ் டார்வின்
உயிர்களின் பரிணாம வளர்ச்சியை பற்றி அன்றைய மூட தனமான கோட்பாடுகளை உடைத்தெரிந்த புத்தகம்

Ø  The Interpretation of Dreams – சிக்மண்ட் பிராய்ட்

உளவியலின் பல உண்மைகளை வெளியிட்ட பிராய்ட் எழுதிய புத்தகம்.


Ø  Das capital (மூலதனம்) ---- காரல் மார்க்ஸ்
கம்யூனிஷத்தின் பைபிள் என்றழைக்கபடும் புத்தகம்.

வ்வாறு உலகின் எல்லாப் பகுதிகளிலும் வரலாற்றின் திசைப்போக்கை நிர்ணயித்திருப்பதும், வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையை மேம்பட பெறும் பங்கு வகுத்துறுப்பதும் நல்ல புத்தகங்களே.



தேர்வு செய்யுங்கள்

நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதுபோலவே, நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்வதிலும் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

- உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க எந்த நூல்கள் உதவும்? ----   --- உங்களுக்குப் பிடித்த துறையில் சிகரங்களைத் தொட எந்த நூல்களின் துணையை நாட வேண்டும்?
- உங்கள் சிந்தனையைச் செதுக்க எந்த நூல்கள் உதவும் என்பதுபோன்ற கேள்விகளுடன் தேடினால் மிகச்சிறந்த அறிவுப் புதையல்கள் உங்கள் கையில் கிடைக்கும்.



இங்கு நான் படித்ததில் பிடித்த சில புத்தகங்களின் விபரங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
1. பொன்னியின் செல்வன் – கல்கி (எத்தனை தடவை படித்திருப்பேன்
 என்று எனக்கே தெரியாது.)
2. சிவகாமியின் சபதம் – கல்கி
3. You can win – சிவ் கேரா
4. வெற்றி நிச்சயம் – சுகி சிவம்
5. வந்தார்கள் வென்றார்கள் – மதன்
6.  வாவ் 2000 – விகடன் வெளியீடு
7.  How is it done – Readers digest
8.  இதோ உதவி - M.R.காப்மேயர்
9.  சக்கரவர்த்தி திருமகன் – ராஜாஜி
10. ஊருக்கு நல்லது சொல்வேன் – தமிழருவி மணியன்
11. ஏன்,எதற்கு,எப்படி --- சுஜாதா
12. மந்திர சொல் --- விகடன் வெளியீடு
13. சத்திய சோதனை ----- மகாத்மா காந்தி
14. இளைஞர்கள் காலம் --- அப்துல் கலாம்
15. மனசே நீ ஒரு மந்திர சாவி --- சுகி சிவம்
16. நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர் ------- லேனா தமிழ்வாணன்
17. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் ---- சுவாமி சுகபோதானந்தா
18. அர்த்தமுள்ள இந்துமதம் ----- கண்ணதாசன்

தற்சமயம் படித்து கொண்டுருக்கும் புத்தகங்கள்
1. Seven Habits of Highly effective people --- Stephen covey
2. Men are from mars, Women are from venus ---- John gray
3. From Sex to Superconsiousness --- Osho
நண்பர்களே நீங்களும் உங்கள் வாழ்க்கையில் படித்த சிறந்த புத்தகங்களை பகிர்ந்து கொள்வீர்கள் என்ற ஆவலுடன் விடைபெறுகிறேன்.

வாழ்க புத்தகங்கள் , வளர்க வாசிப்பு கலை.



அதுவரை
With LOL (Lots Of Love)
தீப்ஸ் வாசன்


3 comments:

eraeravi said... [Reply]

நன்றி
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .

அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi said... [Reply]

திரு .இறைஅன்பு அவர்களின்
வைகை மீன்கள்
படிப்பது சுகமே
ஓடும் நதியின் ஓசை
சாகாவரம்
பணிப்பண்பாடு
இவற்றையும் படிக்க வேண்டிய நல்ல
நூல்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்

Unknown said... [Reply]

@eraeravi
தங்களின் கருத்துக்கு நன்றி

Post a Comment

Newer Post Older Post
Home