Sunday, May 1, 2011

சாய் பாபாவின் சேவைகள்

இம்முறை சாய் பாபா வை பற்றி பதிவு போடலாம் என்று நினைத்து வலைப்பக்கங்களில் உலா வந்த போது ஏற்கனவே அவரை பற்றி பலரும் பதிவிட்டு இருந்ததை படிக்க நேர்ந்தது. எல்வாற்றையும் படித்து விட்டு பதிவு போடுவதற்கு தான் சற்று நேரம் ஆகிவிட்டது.

பதிவு செய்தவர்களிடையே இரண்டு விதமான அபிப்ராயங்களை இருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.ஒரு சாரார் அவரை தெய்வமாக வணங்குபவர்கள்.இன்னொரு பிரிவை சேர்ந்தவர்கள் அவரை வெறும் மேஜிக் நிபுணர்,சித்து விளையாட்டுகாரர்,போலி சாமியார் என்று சொல்லியிருப்போர்.

இந்த பதிவின் நோக்கம் அவர் இறைவனுடைய அவதாராமா இல்லையா என்பதைப் பற்றியோ அவரைச் சார்ந்த சர்ச்சைகளைப் பற்றியோ விவாதிப்பதன்று.மாறாக இதுவரை அவர் செய்த சேவைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதே ஆகும்.


சேவைகள்

சாய் பாபா செய்த சேவைகளை பொதுவாக நான்கு வகையாக பிரிக்கலாம்.
கல்வி
மருத்துவம்
தாகம் தீர்க்க செய்த பணிகள்
பிற சேவைகள்

கல்வி

Sri Sathya Sai Institute of Higher learning --- அனந்தபூர்,புட்டபத்ரி,ஒயிட்பீல்ட் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளை இணைத்து 1981 இல் உருவாக்கபட்டது. இவ்விடத்தில் அடிப்படை பள்ளி கல்வியிலிருந்து , முனைவர் பட்டம் பெறும் வரை வசதிகள் உள்ளன.

Sri Sathya Sai Higher Secondary School --- புட்டபத்திரியில் 1983 இல் தொடுங்கபட்டது.
Sri Sathya Sai Higher Secondary School
Sri Sathya Sai Mirpur College of Music --- பிராசத்தி நிலையத்தில் 2001 இல் துவங்கபட்டது. இங்கு கர்னாடக, ஹிந்துஸ்தானி சங்கீத பயிற்சியும், வீணை, தபலா, சிதார், மிருதங்கம் ஆகிய இசைக் கருவிகள் மீட்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 
அடிப்படை பயிற்சி இரண்டு வருடமும்
டிப்ளமோ அளவிலான பயிற்சி மூன்று வருடமும் இங்கு தரப்படுகிறது


Sri Sathya Sai College of Music
Sri Sathya Sai Gurukulum
27 ஏக்கர் பரப்பளவில் ராஜமுந்திரி (rajahmundry) இல் பத்தாம் வகுப்பு வரை நடத்தப்படும் பள்ளி.

Sri Sathya Sai International School for Human Values – புதுடெல்லியில் உள்ளது.
இங்கு ஏழை மாணவர்களுக்கான பள்ளி இயங்கி வருகிறது

Sri Sathya Sai Junior College  --- பிராசத்தி நிலையத்திற்கு அருகில் கொத்தசேருவு என்ற இடத்தில் உள்ளது

Sri Sathya Sai Junior College
மேற்சொன்ன அனைத்து கல்வி நிறுவனங்களிலும், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ,பள்ளி சீருடை, புத்தகங்கள் எல்லாம் இலவசமாக தரப்படுகிறது.


மருத்துவம்

Health is a essential requisite for man,it is the very foundation for all his endeavours in the pursuit of the four objectives of life: Dharma (Righteousness), Artha (Wealth) , kaama (Desire) and Moksha (Liberation) ---- Sathya Sai Baba

Sri Sathya Sai General Hospital --  4 அக்டோபர் 1956 இல் பன்னிரண்டு படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனை புட்ட பத்திரியில் துவங்கப் பட்டது. 

படி படியாக விரிவடைந்து இன்று 90 படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. தினசரி இங்கு சராசரியாக 600 
நோயாளிகள் பயன்பெறுகிறார்கள்.

Sri Sathya Sai General Hospital


“Vaidyo Narayano Harih” ---- இறைவனே மிகப் பெரிய மருத்துவன் என்ற கருத்தை மெய்பிக்கும் Sri Sathya Sai Medical Trust ---- September 1991 இல் துவங்கப்பட்டன.

Sri Sathya Sai Institute of Higher Medical Sciences  என்ற பெயரில் இரண்டு மருத்துவமனைகள் பிராசாந்திகரத்திலும் (prasanthigram) (அனந்தபூர் மாவட்டம்) , ஒயிட்பீல்டிலும் (பெங்களூர்) இந்த ) Trust இன் கீழ் உருவாக்கப் 
பட்டன.

Sri Sathya Sai Institute of Higher Medical Sciences - Prasanthigram
பலன் பெற்றோர்

31 மார்ச் 2005 இன் கணக்கெடுப்பின் படி 1.13 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். (1 மில்லியன் = 10 லட்சம்)

Sl No
அறுவை சிகிச்சை முறைகள்
பலன் அடைந்தோர் எண்ணிக்கையில்
1

இருதயம் சம்பந்தப்பட்ட அறுவை
சிகிச்சை (Cardiac Surgeries)
16450
2
  
இதய சிலாகையேற்றல்
(Cardiac Catheterization)
17924
3

சிறு நீரக இயல் சம்பந்தமான அறுவை சிகிச்சை (Urology Surgeries)
29675
4

 கண் சம்பந்தப்பட்ட அறுவை
 சிகிச்சை (Ophthalmology surgeries)                
37917
5
  
 எலும்பு சம்பந்தப்பட்ட அறுவை
 சிகிச்சை (Orthopaedics)
603

Sri Sathya Sai Institute of Higher Medical Sciences - Whitefield : Bangalore

பலன் பெற்றோர்

ஜனவரி 2001 முதல் 31 மார்ச் 2005 வரையின் கணக்கெடுப்பின் படி 0.3 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். (1 மில்லியன் = 10 லட்சம்)

Sl No
 அறுவை சிகிச்சை முறைகள்
பலன் அடைந்தோர் எண்ணிக்கையில்
1

இருதயம் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை
(Cardiac Surgeries)
  7437
2

இதய சிலாகையேற்றல்
(Cardiac Catheterisation)
  16,347
3

நரம்பியல் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை
 (Neuro Surgery)
  6928
மேற்சொன்ன அனைத்து மருத்துவமனைகளிலும் நோய் கண்டரிதல், பரிசோதனைகள், மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை, உணவு ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தாகம் தீர்க்க செய்த பணிகள்

அனந்தப்பூர் குடிநீர் திட்டபணி

ஆந்திர மாவட்டத்தின் வறண்ட பகுதியான அனந்தபூரில் 1995 இல் பணிகள் ஆரம்பிக்கபட்டன. புளோரைடு என்ற கனிமம் தண்ணீரில் அதிகமாக கலந்து இருந்ததால் மக்களுக்கு பற்கள், எலும்புகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன.

அனந்தபூர் வறட்சி
ப்ளோரோஸகால் எலும்பு பாதிக்கப்பட்ட சிறுவன்

அனந்தப்பூர் குடிநீர் திட்டபணியில் செய்த பணிகள்;

18 மாதங்களாக தொடந்து நடைப்பெற்ற இந்த திட்டப்பணி உள்ளூர் மக்களின் பேராதரவோடு 3000 மில்லியன் செலவில் முடிக்கப் பட்டது. இந்த திட்ட பணிகள் மூலம் 791 கிராமங்களைச் சேர்ந்த 1.25 மில்லியன் மக்கள் பயன் பெற்றனர். புளோரைடு சம்பந்தபட்ட பிரச்சனைகளும் தீர்க்கப் பட்டன. 

About 2000 kilometres of pipeline of varying diameters were laid.
43 sumps with capacities ranging from 1 lakh (0.1 million) litres to 25 lakh litres were constructed
18 balancing reservoirs with capacities ranging from 3 lakh litres to 10 lakh litres have been constructed on the top of hillocks
Construction of 270 overhead  reservoirs. Capacity: 40,000 – 300000 litres
125 ground level reservoirs were set up. Capacity: 20,000 litres – 80,000 litres. 
More than 1500 precast concrete cisterns of 2500 litres capacity have been installed in various villages. 
Each cistern has four taps for people to collect water.


அனந்தபூர் - பணி நிறைந்தவுடன் பின்
அனந்தபூர் - பணி நிறைந்தவுடன் பின்
இந்த மகத்தான சேவையைப் பாராட்டி இந்திய அரசு 23 நவம்பர் 1999 அன்று வெளியிட்ட அஞ்சல் தலை (stamp)


மேடக் ,மெஹபூப் நகர் குடிநீர் திட்டபணிகள்


கிருஷ்ணா நதியில் இருந்து இந்த கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு வரப் பட்டது. 2001 முடிக்கப்பட்ட இந்த திட்டப்பணி 530 மில்லியன் செலவில் செய்து முடிக்கப் பட்டது. இத்திட்டத்தால் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பயன் பெற்றனர்.

சென்னைக்கு குடிநீர் (தெலுங்கு கங்கை திட்டம்)


19 ஜனவரி 2002 அன்று சென்னையின் தாகத்தை தீர்க்க உறுது பூண்டுள்ளதாக சாய் பாபா அறிவிப்பு.

சென்னைக்கு நீர் வரும் பாதை
பூண்டி நீர் தேக்கதற்கு தண்ணீர் வரும் பாதை. (இந்த நீர்தேக்கம் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.) 

ஜீலை 2002 பணிகள் துவங்கப் பட்டன.

முதல் கட்டமாக கண்டலேறு நீர்தேக்கத்தின் கொள்ளளவு 16 TMC யிருந்து 68 TMC ஆக உயர்த்தப் பட்டது.

இதன் மூலம் சென்னைக்கு குடி நீர் தருவது மட்டுமல்லாது சித்தூர்,நெல்லூர் ஆகிய ஊர்களை சேர்ந்த 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்றன.

கண்டலேறு - முன்

கண்டலேறு - பணி நிறைவடைந்த பின்



                                                           
கண்டலேறு - சென்னை பாதை - முன்பு
கண்டலேறு - சென்னை பாதை - பணி நிறைவுக்கு பின்

திட்டப்பணிகள் குறித்த சில தகவல்கள்;

4000 ஊழியர்கள் 16 மாதங்களாக உழைத்த காரணத்தால் இத்திட்டம் சாத்தியமானது.

பணிகளை பாராட்டிய ஆந்திர அரசு தெலுங்கு கங்கை என்ற திட்டபணியின் பெயரை சத்திய சாய் கங்கை என்று மாற்ற அனுமதி அளித்தது.

23 நவம்பர் 2004 அன்று கண்டலேறு நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டு 27 நவம்பர் அன்று  பூண்டி தேக்கத்தை அடைந்தது.

பணி நிறைவடைவதற்கு தண்ணீர் வருவதற்கு 8-10 நாள் ஆகும்.ஆனால் இப்போதோ கால்வாய்கள் அகல பட்டதால்,தூர் வாற பெற்றதால் 4-5 நாட்களிலே தண்ணீர் கண்டலேறுலிருந்து பூண்டி தேக்கத்திற்கு வந்து விடுகிறது.




SOME PROJECT STATISTICS
 Soil Excavation
11,00,000 cubic metres
 Hard rock excavation
80,000 cubic metres
 Stone masonry work
15,000 cubic metres
 Rough stone revetment
30,000 cubic metres
 Cement Concrete Guniting
2,35,000 square metres
 Cement Concrete Lining
1,85,000 square metres

கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் செய்த திட்டப்பணிகள்.

கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட குடிநீர் திட்டப்பணிகளால் அப்பகுதியில் வாழும் 2.20 இலட்சம்  மற்றும் 4.70 இலட்சம்  மக்கள் பயன் அடைந்துள்ளனர்.


பிற சேவைகள்

கிராம சேவைகள்

தீன ஜனோதாரன பதாகாமு

சுனாமியின் போது நாகப்பட்டிணத்தின் 5000 குடும்பங்களுக்கு செய்த சேவைகள்.

சுனாமி நிவாரண பொருட்கள் 




முதியோர் சேவை


கடுகோடி,பெங்களூர்,அனந்தபூர் ஆகிய இடங்களில் ஆதரவற்ற முதியோருக்கான ஆசிரமங்கள் உள்ளன.

இங்கு அவர்களுக்கான வசதிகள் அனைத்தும் இலவசமாக தரப் படுகின்றன.

முடிவுரையாக அவர் வாழ்வில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம்

1926 நவம்பர் 23 இல் சத்திய நாரயண ராஜூ என்ற நபர் இவ்வுலகில் பிறந்தார். சாய் பாபா என்ற பெயரில் வாழ்ந்தார்.24 ஏப்ரல் 2011 இவ்வுலகை விட்டு சென்றுவிட்டார்.

85 ஆண்டுகள் வாழ்ந்த அந்த மனிதர் எவ்வளவு சேவைகள் செய்துருக்கிறார்.!! எத்தனை கோடி மக்கள் பயன் பெற அவர் காரணமாக இருந்திருக்கிறார்


இதுவரை இவ்வுலகிற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? அல்லது என்ன செய்ய போகிறோம்?? 


இவ் உலகம் நம் காலத்திற்கு பிறகு நம்மை எவ்வாறு நினைவில் வைத்து கொள்ள போகிறது...........யோசியுங்கள்.....


மனித குலத்திற்கு சாய் பாபா செய்த சேவைகளை ஒரு உத்வேகமாக (Inspiration) எடுத்துக் கொண்டு நம்மால் முடிந்ததை இவ்வுலகிற்கு செய்யவோமாக.


அதுவரை,
with LOL (Lots of Love)
deepsvasan




















0 comments:

Post a Comment

Newer Post Older Post
Home