Tuesday, May 31, 2011

ஆளும் சபைகளின் அழகிய அணிவகுப்பு


ம்இம் முறை பதிவு போட நேரம் ஆகிவிட்டது. வேலை பளுதான் காரணம்.சென்ற பதிவு தேர்தல் முடிவுகளுக்கு ஒரு நாள் முன்னால் போட்டேன். மக்கள் தெளிவான மெஜாரிட்டியை தந்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தெளிவான மனநிலையோடு ஆட்சி செய்யட்டும்.

ஆட்சி மாற்றத்தையொட்டி தமிழக சட்டசபையும் மாறியது. இது குறித்து எழுந்த சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபைகள் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசைப்பட்டேன்.
அதன் விளைவே இந்த பதிவு

ஆங்காகே சம்பந்தப்பட்ட விபரங்களை தந்து இருக்கிறேன்……


ஆந்திர பிரதேசம்
3 ஆகஸ்ட் 1985 அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்து வைக்கப் பட்டது.சட்டச்சபையின் முன்னால் 22 அடி உயரமுள்ள வெண்கலத்தால் ஆன காந்தி சிலை தியான நிலையில் இருப்பதை காணலாம்.
இந்தியாவிலே பெரிய காந்தி சிலை இதுதான். டில்லி பாரளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையின் நகல் வடிவம் இது. ஆனால் அளவில் பெரியது.

அஸ்ஸாம்
ஏப்ரல் 7 ,1937 இல் இருந்து இந்த சட்டசபை இயங்க தொடங்கியது.

கேரளா

நியம சபா என்று அழைக்கப்படுகிறது. மே 22 ,1998 இல் இந்திய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனால் திறக்கப்பட்டது. 5 மாடி மற்றும் ஒரு கீழ் தளமும் உள்ள இச்சட்டசபை 900 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.


கேரள சட்டசபையின் இன்னொரு தோற்றம்

ஜம்மு காஷ்மீர்
முதல் சட்டசபை 1934இல் மகாராஜா ஹரிசிங் ஆல் அமைக்கப்பட்டது. பிறகு பெரும்பான்மையினோரின் ஆதரவு இழந்ததால் கலைக்கப்பட்டது. ஜம்மு & காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின் மகாராஜாவின் அதிகாரம் குறைக்கப்பட்டது.பிறகு சேக் அப்துல்லா தலைமையில் புதிய அரசாங்கம் பதிவியேற்றது.


பீகார்

திரிபுரா
சட்டசபை உஜயன்தா (ujjayanta)அரண்மனை வளாகத்தில் செயல்படுகிறது. இந்த அரண்மனை மகாராஜா ராதாகிஷோர் மாணிக்கயா என்பவரால் 1899-1901 இல் பத்து லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
இதற்கு பெயர் தந்து சிறப்பித்தவர் ரவீந்திர நாத் தாகூர் ஆவார்.

குஜராத்



 கர்நாடகா
இந்தியாவிலேயே பெரிய சட்டசபை இதுதான்.கெங்கல் ஹனுமந்தய்யாவின் பெரு முயற்சியால் கட்டப்பட்டது. விதான் சவ்தா (Vidhan Soudha) என்று அழைக்கப்படும் இச்சட்டச் சபை 1952 துவங்கி 1956 இல் கட்டி முடிக்கப்பட்டது. அன்றைய கணக்கின் படி 1.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.இன்றோ வருடத்திறகு பராமரிப்பு செலவு மட்டும் 2 கோடி ஆகிறதுகட்டிடத்தின் முன் பகுதியில Government’s Work is God's Work.”என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.


ஹிமாச்சல் பிரதேஷ்

ஹரியானா
பிரான்ஸ்  கட்டட கலை நிபுணர் லீ கர்பூஸியர் (Le Corbusier) ஆல் வடிவமைக்கபட்டது. பஞ்சாப், ஹரியானா இரண்டிற்கும் பொதுவாக இயங்கும் சட்டசபை1966 வரை பஞ்சாப்,ஹரியானா,ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மூன்றிற்க்கும் பொதுவாக இச்சட்டசபை இருந்தது. 1966 இல் ஹிமாச்சல் சிம்லாவின் தலைமையில் தன் மாநிலமாக பிரிந்தது. பஞ்சாப், ஹரியானா ஆகியவை யூனியன் பிரதேசங்களாக சண்டிகரின் தலை நகரமாக கொண்டு இயங்கி வருகிறது.
ஜார்கண்ட்

மத்திய பிரதேஷ்
போபாலில் உள்ளது.
25.26 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளதுவிதான் சபா என்பது இச்சட்டசபையின் பெயர்.விதான் பவன் என்ற இடத்தில் உள்ளது56 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சட்டசபையை வடிவமைத்தவர் சார்லஸ் கோரியா என்பர் ஆவார்.


மகாராஷ்ரா

சட்டீஸ்கர்

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலம்.         1, நவம்பர் 2000 இருந்து இயங்க தொடங்கியது. 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நிர்வாக வசதிக்காக இக்கட்டடும் Section A,B,C என்று மூன்றாக பிரிக்கப்பட்டது.இவ்வளாகத்தில் காந்தி சிலை (2 டன் எடையுள்ளது) மற்றும் ,அசோக ஸ்தூபி (3 டன் எடையுள்ளது) ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
மணிப்பூர்


மேகாலாயா

மேற்கு வங்கம்
Writer’s Building – இது மேற்கு வங்கம் சட்டசபை வளாகம் இயங்கும் இடம். ஆங்கிலேய அரசாங்கத்தின் எழுத்தர் வேலை பார்ப்பதற்காக 1704 கட்டப்பட்டது.(ஆகையால் தான் இந்த பெயர்). சுதந்திரத்திற்கு பிறகு பல சட்டசபை மற்றும் பல அரசாங்க அலுவலகங்கள் இங்கு செயல்படுகின்றன. 

நாகாலாந்து

ராஜஸ்தான்
இந்த சட்டசபை ஜெய்ப்பூரில் ஜோதி நகர் என்னும் இடத்தில் உள்ளது. சபையின் வெளிப்புறத்தில் ராஜஸ்தானின் பாரம்பரிய மிக்க அம்சங்களை காணலாம்.உட்புறத்தில் மற்றும் கட்டிடத்தின் நுழைவாயிலில் ஜெய்பூர்,செகாவதி,மார்வார்,மேவார் ஆகிய பிரதேசங்களின் ஓவியங்கள் அலங்கரிகின்றன145 அடி உயரமும்,6.08 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
 ஒடியா (ஒரிசா) 


சிக்கிம்

கோவா
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் மார்ச் 5,2000 இல் புதிதாக கட்டப்பட்ட இச்சட்டசபை திறக்கப்பட்டது.

அது சரி ………. தமிழகத்தை பற்றி ஒன்றுமே போடவில்லையே என்று கேட்பது புரிகிறது. அதை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம் என்று இம்முறை விட்டு விட்டேன்.

முடிந்த வரை google தேடு இயந்திரத்தை பயன்படுத்தி படங்களையும் தந்து இருக்கிறேன்.ஒரு சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைப் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. அதை பற்றிய விஷயங்களை தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்.
அதுவரை with LoL (Lots of Love)...…….



post signature

4 comments:

கூடல் பாலா said... [Reply]

அடடே ......நல்லா இருக்குதே ....!

Charles said... [Reply]

Nice work man.. Keep it up...

Erode senthil said... [Reply]

நல்லா இருக்குதே ....!

ibrahim said... [Reply]

nalla matter

Post a Comment

Newer Post Older Post
Home