Tuesday, May 31, 2011

ஆளும் சபைகளின் அழகிய அணிவகுப்பு


ம்இம் முறை பதிவு போட நேரம் ஆகிவிட்டது. வேலை பளுதான் காரணம்.சென்ற பதிவு தேர்தல் முடிவுகளுக்கு ஒரு நாள் முன்னால் போட்டேன். மக்கள் தெளிவான மெஜாரிட்டியை தந்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தெளிவான மனநிலையோடு ஆட்சி செய்யட்டும்.

ஆட்சி மாற்றத்தையொட்டி தமிழக சட்டசபையும் மாறியது. இது குறித்து எழுந்த சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபைகள் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசைப்பட்டேன்.
அதன் விளைவே இந்த பதிவு

Thursday, May 12, 2011

ஜெயிக்க போவது யாரு..............

நாளை (13-5-2011) தமிழகத்திற்கு முக்கிய நாள்.   
அடுத்த ஐந்து வருட தலையெழுத்தை தீர்மானிக்கும் நாள்……. 
     
அதிக சதவீதம் வாக்கு பதிவு, முன்பு எப்போதும் இல்லாத அளவு 
தேர்தல் கமிஷனின் கட்டுபாடுகள், செய்த சாதனைகளை நம்பாமல் வைட்டமின் ‘ப’ வை நம்பும் அரசியல் கட்சிகள் என்று ஒரு வழியாக தேர்தல் திருவிழா* முடிந்ததோடு அவரவர் நிலைக்கேற்ப கவலைகளையும் தந்து சென்று உள்ளது. 

Saturday, May 7, 2011

அட்சய திருதி --- கற்க வேண்டிய பாடங்கள்


அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள் ‘’எப்போதும் குறையாதது’’. அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது.

இதற்கு உண்மையான அர்த்தம் என்ன வென்றால் இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தா ருமங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பது தான்.  ஆனா நாட்டுல நடக்குற கூத்து என்ன??

நேத்து நம்ம மக்கள் வாங்கி குவிச்ச தங்கம் எவ்வளவுன்னு பாருங்க !!

Sunday, May 1, 2011

சாய் பாபாவின் சேவைகள்

இம்முறை சாய் பாபா வை பற்றி பதிவு போடலாம் என்று நினைத்து வலைப்பக்கங்களில் உலா வந்த போது ஏற்கனவே அவரை பற்றி பலரும் பதிவிட்டு இருந்ததை படிக்க நேர்ந்தது. எல்வாற்றையும் படித்து விட்டு பதிவு போடுவதற்கு தான் சற்று நேரம் ஆகிவிட்டது.

பதிவு செய்தவர்களிடையே இரண்டு விதமான அபிப்ராயங்களை இருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.ஒரு சாரார் அவரை தெய்வமாக வணங்குபவர்கள்.இன்னொரு பிரிவை சேர்ந்தவர்கள் அவரை வெறும் மேஜிக் நிபுணர்,சித்து விளையாட்டுகாரர்,போலி சாமியார் என்று சொல்லியிருப்போர்.

இந்த பதிவின் நோக்கம் அவர் இறைவனுடைய அவதாராமா இல்லையா என்பதைப் பற்றியோ அவரைச் சார்ந்த சர்ச்சைகளைப் பற்றியோ விவாதிப்பதன்று.மாறாக இதுவரை அவர் செய்த சேவைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதே ஆகும்.

Newer Posts Older Posts
Home