எவ்வாறு எதிர்கொண்டார்கள் சுனாமியை
(ஜப்பான் மக்களிடம் இருந்து நாம் (இந்தியர்கள்) கற்றுகொள்ள வேண்டிய பாடங்கள்)
1.அமைதி காத்தமை
சுனாமி வந்ததாக அறிவிக்கபட்டவுடன் யாரும் அதற்காக தோளிலும், மார்பிலும் அடித்து கொண்டு அழுது ஆர்பாட்டம் செய்யவில்லை.அமைதியாக பிரச்சனையை எதிர் கொள்ள தயாரானார்கள்.
2. ஒழுங்கு முறை
பாதிக்கபட்ட மக்களுக்கு தண்ணீர் மற்றும் காய்கறிகளை அரசாங்கம் வழங்கிய போது வரிசையில் நின்றுதான் பொறுமையாக வாங்கி கொண்டார்கள். முட்டல், மோதல், கூச்சல், குழப்பம் எங்கும் கிடையாது.
3. முன் கூட்டியே திட்டமிடல்
சுனாமி மற்றும் நிலநடுக்கம் அதிகம் வரக்கூடிய பிரதேசமாக தங்கள் நாடு இருப்பதை அறிந்து முன் கூட்டியே அதற்கேற்ற போல் வீடுகளை அமைத்து கொண்டார்கள். இதனால் சேதத்தின் அளவு குறைக்கபட்டது.
4. கண்ணியம்
சுனாமியால் பாதிக்கபட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரண பொருட்கள் தந்த போது தங்களுக்கு தேவையானதை மட்டுமே வாங்கி கொண்டார்கள். போராசை பிடித்து முடித்த மட்டும் அள்ளிக்கொள்ள வில்லை.
5.கட்டுப்பாடு
ஆளில்லாமல் திறந்திறுந்த கடைகளிலிருந்து பொருட்கள் திருடப் படவில்லை.
6. தியாக உணர்வு
சுனாமியின் அலைகளின் போதும் அணு உலையில் ஐம்பது பணியாளர்கள் உலைகள் வெப்பமாவதை தவிர்க்க தொடர்ந்து தங்களால் முடிந்ததை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களின் தியாகத்திற்கு இணையேது??
7. பொறுப்புணர்வு
உணவகங்கள் எவ்வித அரசாங்க உத்திரவு இன்றி தாங்களாகவே விலைகளை குறைத்தார்கள்.
8. பயிற்சி
வயதில் மூத்தோர் ,இளையோர் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவும்,பயிற்சியும் இருந்தது.
(இது போன்ற காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி அனைவருக்கும் அங்கு அளிக்க படுகிறது.)
9.பத்திரிக்கை தர்மம்
பத்திரிக்கைகள் தங்கள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று பரபரப்பான செய்திகளை வெளியிட வில்லை. தேவையான செய்திகள் மட்டுமே வந்த கொண்டு இருந்தன.
10. ஓழுக்கம்
சுனாமி தாக்கியதாக அறிவிக்கப்பட்டவுடன் அங்கு இருந்த பெரிய பெரிய வணிக வளாகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அப்போது அங்கு பொருட்களை வாங்கி கொண்டு இருந்த மக்கள் அப்பொருட்களை எடுத்த இடத்திலேயை திரும்ப வைத்து விட்டு அவ்விடத்தை விட்டு விரைவாக அகன்றார்கள்.
|
2 comments:
ivargalukka intha kathi
@நண்பன்
கருத்துக்கு நன்றி.
நம்மால் முடிந்த உதவிகளையும்,பிராத்தனைகளையும் ஜப்பான் மக்களுக்காக செய்வோமாக.
Post a Comment