லாஜிக் இல்லாத மேஜிக்
தி.மு.க ,மற்றும் அ.தி.மு.க -- இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகயை படித்திருப்பீர்கள்.(பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை). அறிவிக்கபட்டுள்ள இலவசங்களை பார்த்தால் ---- இது மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக தெரியவில்லை,அரசியல் கட்சிகள் தாங்கள் தேர்தலில் தேறுவதற்காக வெளியிடப் பட்ட அறிக்கையாகவே தெரிகிறது.
இரு கட்சிகளுமே இலவசங்களை நம்பி மக்களை சந்திக்க முனைந்துள்ளன.
நேர்மையான ஆட்சியை தருவதாக இரு கட்சிகளுமே கூறவில்லை (இயலாது என்று நினைத்து விட்டார்கள் போல)
ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பதைத்தான் இரு கட்சிகளுமே விரும்புகின்றன. 60 ஆண்டுகள் சுதந்திரத்திற்கு பிறகும் நம் வளர்ச்சி ஒரு ரூபாய் அரிசியை நம்பித்தான் இருக்கிறது என்றால், அது கேவலமான விஷயம் தானே?
முறையான ஆட்சித் திறன் இல்லாததால்தான், இவர்கள் இலவசத் திட்டங்களை அறிவிக்கிறார்கள். மிக்சி,கிரைண்டர்,பேன்(fan), என்று இலவசங்களை காட்டி அரசியல் கட்சிகள் மக்களை முட்டாள்களாக்கி வருகின்றன. நாமும் சந்தோஷமாக முட்டாளாகி வருகிறோம்.
ஒருவனுக்கு மீன் பிடித்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடு-என்று ஒரு சீன பழமொழி உண்டு. இவர்கள் இலவசங்களை தருவதை விட வீடுதோறும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது வேலை வாய்ப்பை உறுதி செய்யலாம். உழைத்து வாழ வழி செய்யலாம்.
ஒரு பொருள் உழைப்பின்றி இலவசமாக கிடைத்தால் அதன் மீது எப்படி அக்கறை இருக்கும்? அலட்சியம் தான் இருக்கும். உழைப்பில்லா செல்வம் பெறுவதிலா இன்பம் ??………. என்ற பழைய பாடல்தான் ஞாபகம் வருகிறது.
இலவசங்கள் தொடர வறுமையை காரணமாக சொல்கிறார்கள்.
வறுமைக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றுள் மிக முக்கிய காரணம் குடி பழக்கம்.
கேவலம் என்னவென்றால் ஊர் தோறும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து குடிப்பவர்களை அரசே ஊக்குவிக்கிறது !!. குடி பழக்கதிலிருந்து மீள வழி செய்ய வேண்டிய அரசு ,அதை ஊக்கபடுத்தி கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே அரசியல்வாதிகள் பலருக்கு மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் அரசும்,அரசியல் வாதிகளும் பல கோடி லாபம் அடைகிறார்கள். (பிறகு குடிப்பதை ஊக்குவிக்காமல் என்ன செய்வார்கள்?)
ஆனால் மக்களோ குடித்துவிட்டு விலை மதிக்க முடியாத உடல் ஆரோக்கியம், குடும்ப நிம்மதி, மன நலன் ஆகியவற்றை இழக்கிறார்கள். குடும்பமோ வறுமையில் வாடுகிறது.
இப்படி மக்களின் ஆரோக்கியத்தை நாசம் செய்து விட்டு, அவற்றை சரி செய்ய இலவச சிகிச்சை என காப்பீடு திட்டங்களை அறிவிப்பது என்பது பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல் உள்ளது.
அரசியல்வாதிகள் பதவியில் அமர்வதற்கும்,பணம் கொள்ளையடிப்பதற்கும் மக்கள் குடிகாரர்களாக, சோம்பேறிகளாக, சிந்தனை தெளிவற்றவர்களாக ஆக்கபட்டு கொண்டு இருக்கிறார்கள். இது தேவையா??
இலவசங்கள் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்க கூடாது..........தயவு செய்து சற்று யோசியுங்கள்.
அரசியல்வாதிகள் திருந்துவதாக தெரியவில்லை.
அரசியல்வாதிகள் திருந்துவதாக தெரியவில்லை.
மக்களே......நீங்களாகவே விழித்துக் கொண்டால் தான் உண்டு.
(நன்றி: தினமலர்,தினமணி கார்டூன்ஸ்)
|
0 comments:
Post a Comment