வாசக நண்பர்களே இன்று சர்வதேச புத்தக தினம். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நண்பர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவ்வகையில் எனக்கும் உண்டு.
வாழ்வில் சோர்ந்திருக்கும் சில சந்தர்பங்களில் என்னை எனக்கு அறிமுகபடுத்தியதே அந்த நண்பர்கள் தான். ஆம் நான் புத்தகங்களை தான் சொல்கிறேன். இதோ மார்க் ட்வெயின் என்ற அறிஞர் சொல்வதை கேளுங்கள்
‘’நல்ல நண்பர்கள், நல்ல புத்தங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை”
நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் அறிவுப் புதையல்கள், நம் நம்பிக்கை மாளிகையின் கதவுகள்.
அவை நம்மை சாதிக்கத் தூண்டும் கிரியா ஊக்கிகள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தகவாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப் படுத்தியுள்ளான் பேரறிஞர் தாமஸ் ஜெஅபர்சன்.(Thomas Jefferson)
|